இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு

Updated : 21-11-19 / Vinayak

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். கொழும்புவில் உள்ள நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக,  பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்த நிலையில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை  நேற்று நியமித்தார். 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share it On

Review