ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் எப்போது? பிரதமர் அறிவிப்பு!
Updated: 11-04-2019
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் மே 18ம் தேதி நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சனைகள் காரணமாக, அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோது ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக இரண்டாவது முறையாக நடந்த வாக்கெடுப்பை சந்திக்க நேரிட்டது. இதையடுத்து பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார்.
இதையடுத்து, ஸ்காட் மாரிசன் ஆஸ்திரேலிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறியுள்ளனர். ஸ்காட் மாரிசனுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இதுவரை இல்லை. எனினும், வரவிருக்கும் தேர்தலில் அவருக்கு எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டின் பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று வெளியிட்டார். பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவ,”வரும் மே 18ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும்” என்று அறிவித்தார்.
இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Review