இந்தோனேசிய அதிபர் தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் ஜோகோ விடோடோ!

இந்தோனேசிய அதிபர் தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் ஜோகோ விடோடோ!

Updated: 21-05-2019

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளார்.

இந்தோனேசிய அதிபர் தேர்தல் கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடைபெற்றது. பல வாரங்களாக நீடித்த வாக்கு எண்ணிக்கை இன்று முடிவடைந்துள்ளது. இதில், தற்போது அதிபராக உள்ள ஜோகோ விடோடா (வயது 57) மீண்டும் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

இந்தோனேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோகோ விடோடோ 55.5 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோ 44.5 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்” என்று தலைமை தேர்தல் ஆணையர் அரீப் புதிமான் இன்று தெரிவித்துள்ளார்.  

இதன்மூலம், இந்தோனேசியாவில் இரண்டாவது முறையாக ஜோகோ விடோடோ தொடர்ந்து ஆட்சி புரிய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it On

Review