மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று இம்ரான் கான் கூறினாரா? பாகிஸ்தான் அரசு விளக்கம்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று இம்ரான் கான் கூறினாரா? பாகிஸ்தான் அரசு விளக்கம்

Updated: 12-04-2019

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்தாக வெளியான தகவலை, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மறுத்துள்ளது.

இந்திய மக்களவை தேர்தல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,”மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால், இந்தியா -பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடர வாய்ப்புள்ளது” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதாக தகவல்கள் வெளியாகின. அவரது கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

இந்நிலையில், இம்ரான்கான் கருத்துக்கு பாகிஸ்தான் அரசு தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி இதுதொடர்பாக விளக்கமளித்தார். இதில் பேசிய அவர்,”இந்திய ஊடகங்கள் அனைத்து விஷயங்களையும் பதற்றத்துக்குரியவையாக மாற்றி விடுகின்றன. பிரதமர் இம்ரான் கானின் கருத்து, தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும்,”மோடி மீது பிரதமர் இம்ரானுக்கு வைத்துள்ள கருத்து என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தியத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்” என்று முகமது குரேஷி தெரிவித்தார்.

Share it On

Review