மீட்புப்பணியின் போது உயிரிழந்த வீரருக்கு தீயணைப்புத்துறையினர் அஞ்சலி

மீட்புப்பணியின் போது உயிரிழந்த வீரருக்கு தீயணைப்புத்துறையினர் அஞ்சலி


updated / nykvt / 15.07.2020 / 10.07

சென்னை, 

மீட்புப் பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரருக்கு சென்னை தீயணைப்புத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரம்பலுார் மாவட்டம், செல்லியம்பாளையம் கிராமத்தில் வெடிவைத்து தோண்டப்பட்ட கிணற்றில் நேற்று இருவர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பதற்காாக பெரம்பலுார் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர் ராஜ்குமார் (வயது 36) உடனடியாக நாற்காலி முடிச்சு போடப்பட்ட கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கினார். ஒருவரை தனது கயிற்றின் மூலம் மீட்டு காப்பாற்றினார். மற்றொருவரை காப்பாற்றுவதற்காக இறங்கிய போது விஷவாயு தாக்கி ராஜ்குமார் மயக்கமடைந்தார்.  அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் தமிழக தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை எழுப்பியது.
மீட்புப் பணியின் போது வீரமரமைடைந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமார் கடந்த 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு மனைவி மற்றும் 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ராஜ்குமாரின் மறைவால் அவரது குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மீட்புப் பணியின் போது தனது இன்னுயிரை நீத்து வீரமரணம் அடைந்த ராஜ்குமாருக்கு சென்னை தீயணைப்புத்துறை அலுவலகத்தில் வீர வணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு இதில் கலந்து கொண்டு ராஜ்குமாரின் திருவுருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மற்றும் டெபுடி டைரக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Share it On

Review