குட்கா மற்றும் மாவா தயாரித்த 5 பேர் கும்பல் கைது
UPDATED / 8.8.2020/ 22.54/NYKV
சென்னை, அமைந்தகரை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்கு வகைகளை தயாரித்து விற்பனை செய்த 5 பேரை கைது செய்த போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் குட்கா பாக்கு மற்றும் மாவா தயாரித்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அண்ணாநகர் துணைக்கமிஷனர் ஜவகர் மேற்பார்வையில் அமைந்தகரை போலீஸ் தனிப்படை அது தொடர்பாக நெல்சன் மாணிக்கம் ரோட்டில் நேற்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்குள்ள பிரின்ஸ் பான் பேலஸ் கடை முன்பு சிலர் துணிப்பையை வைத்தபடி நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார் பையை சோதனையிட்டனர். அப்போது அதற்குள் மாவா, ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்து (41), அமைந்தகரையைச் சேர்ந்த வடமாநில வாலிபர் பின்டுதாத்தி (28), அயனாவரத்தைச் சேர்ந்த அஸ்வாக் (30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் அயனாவரத்தைச் சேர்ந்த சஜாத் (22), அமைந்தகரையைச் சேர்ந்த பிரமோத் மண்டல் (32), ஆகிய இருவரையும் கைது செய்தனர். 5 பேரும் அமைந்தகரை எம்.எம்.காலனி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த மாவா மற்றும் குட்கா பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மாவா மற்றும் குட்கா புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Review