முன்னால் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மணி மண்டபம்; ஈபிஸ் - ஓபிஎஸ் திறந்தனர்!
updated : 04 - 01 - 2021 / 15.30 / NYKVT
நெல்லை,
மறைந்த முன்னால் தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மணிமண்டபம், மற்றும் உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை திறந்து வைத்தனர். பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகிலுள்ள கோவிந்தப்பேரியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிந்தப்பேரியில் பி.எச்.பாண்டியனின் மணி மண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுகவை எம்.ஜி.ஆா். தொடங்கிய காலத்திலிருந்து அவருடன் பயணித்தவா் பி.எச். பாண்டியன். 1945 பிப்ரவரி 27இல் பிறந்த இவா், சட்டப் பேரவை உறுப்பினராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தார். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவா்களில் முதன்மையானவராக இருந்த பி.எச்.பாண்டியன் 2020ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி மறைந்தார்.
Review