பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளப்போகும் விஐபிக்கள் யார்

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளப்போகும் விஐபிக்கள் யார்

sep 27 2023

பிக்பாஸ் 7 சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று தினம் தோறும் புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தற்போது புதிய போட்டியாளர்கள் இருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா என்பவர் பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள இருக்கிறாராம். இவர் ஒரு நடன கலைஞர் ஆவார். மேலும் கடந்த பிக் பாஸ் 5ல் கலந்துகொண்ட நடிகை தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வரும் அனைவரும் கண்டிப்பாக பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ள போகிறார்களா என்று தெரியவில்லை. இந்த வாரம் இறுதியில் தெரிந்துவிடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் 20 போட்டியாளர்கள் யார் யார் என்பதை அறிவதில் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
 

Share it On

Review