இயக்குநர் சங்கர் ரஜினியுடன் திடீர் சந்திப்பு

 இயக்குநர் சங்கர் ரஜினியுடன் திடீர் சந்திப்பு

15.6.2022, 14,57

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளன. அதன்படி சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். மேலும் இந்த மூன்று திரைப்படங்களும் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வெற்றி அடைந்துள்ளன. இதனிடையே இவர்கள் கூட்டணியில் முதல்முறையாக வெளியான திரைப்படம் சிவாஜி, அப்படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் ஆகியுள்ளன. அதன் கொண்டாட்டமாக ரசிகர்கள் ஏற்கனவே பதிவுகளை வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படி இயக்குநர் ஷங்கரே நடிகர் ரஜினியை நேரில் சந்திதுள்ளார். சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் இந்த சந்திப்பு நடந்ததாகவும அவர் தெரிவித்துள்ளார்.

Share it On

Review