நான் ரசிச்சது இவரைத்தான் மனம் திறந்த சாய் பல்லவி

நான் ரசிச்சது இவரைத்தான் மனம் திறந்த சாய் பல்லவி

jan 17 2024

'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து சூர்யாவுடன் NGK படத்தில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத 'SK21' படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தான் ரசித்த நடிகை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "சின்ன வயசா இருக்கும்போது நிறைய நடிகைகளை ரசிச்சிருக்கேன். நான் 2-ம் வகுப்பு படிக்கும்போது கண்ணாடி முன்னாடி நின்னு என் முகத்தை பார்த்து சிம்ரன் மாதிரி இருந்தால் தான் ஹீரோயின் ஆகா முடியுமோன்னு யோசிச்சுருக்கேன். இப்போ யோசிப்பேன் "ஒரு குழந்தைக்கு எப்படி இப்படிலாம் யோசிக்க வருதுன்னே தெரியலன்னு" நினைச்சேன். அதனால் நான் மிகவும் ரசிச்ச நடிகைன்னா சிம்ரன சொல்லலாம்" என்று பேசியுள்ளார்.    
 

Share it On

Review