ரயில் கொள்ளையன் ஆந்திராவில் கைது!
Updated : 30 - 09 - 2021 / NYKVT
சென்னை, பூங்கா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பெண் ஒருவரின் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்று விட்டார். இது தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் செங்கல்பட்டு, , மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் செல்போன், நகை ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவா (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை ரயில்வே போலீசார், அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 3¾ பவுன் நகை, 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Review