‘தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் -சன்னி வக்பு வாரியம்

‘தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் -சன்னி வக்பு வாரியம்

Updated : 09-11-19 / Vinayak

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்டவாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில், சன்னி வக்பு வாரியத்தின் வழக்கறிஞர் சஃபரியாப் ஜிலானி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்; ஆனாலும் தீர்ப்பில் எங்களுக்கு திருப்தியில்லை. தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாக கருதக்கூடாது. இந்த தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும் நடத்தக் கூடாது. தீர்ப்பின் முழு விவரத்தை படித்தப்பின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

இந்த வழக்கில் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாராவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share it On

Review