இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நாளை முதல் நேரடி விமான சேவை

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நாளை முதல் நேரடி விமான சேவை

Updated : 27 - 09 - 2021 / NYKVT 

புதுதில்லி,
 ‌‌          கரோனா 2வது அலை தீவிரமாக பரவியபோது, இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வந்தது. விமான தடையை ரத்து செய்து நேரடி விமான போக்குவரத்தை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் போக்குவரத்து தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. நேரடி விமான தடை காரணமாக, கனடாவிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இணைப்பு விமானங்களில் துபாய், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய 3 நாடுகளை கடந்து செல்லும் நிலை உள்ளது. அத்துடன், 3வது நாட்டில் கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும். ரூ. 1.5 லட்சத்தில் முடிய வேண்டிய பயண செலவு, ரூ.5 லட்சத்திற்கும் மேல் ஆனது. இந்நிலையில், நாளை முதல் இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை அனுமதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் மேலாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

Share it On

Review