இதை செய்தால் கொரோனா ஓடி விடும்:

இதை செய்தால் கொரோனா ஓடி விடும்:

10.07.2020, NYKVT

 

வாட்ஸ்அப் செயலியில் வைரலாகும் ஆடியோ ஒன்றில் ஆவி பிடித்தாலே கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிவிடும் என கூறப்படுகிறது. ஆடியோ குரலில் பேசுவது மும்பையை சேர்ந்த மருத்துவர் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
வைரல் பதிவுகளின் பின்னணியை ஆய்வு செய்ததில் ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகிவிடும் என இதுவரை அறிவில் ரீதியில் நிரூபிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.  உண்மையில் ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கடைப்பு மட்டும் சரியாகும், ஆனால் உடலில் உள்ள வைரஸ் எதுவும் அழிக்கப்படாது என நுரையீரல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாட்ஸ்அப் வைரல் ஆடியோவில் மும்பை பகுதியில் கூப்பர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் போன்சேல் மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசுவது தெளிவாக கேட்கிறது. வைரல் ஆடியோ பற்றி போன்சேல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அந்த வகையில் வைரல் ஆடியோவில் உள்ளது போன்று ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகும் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Share it On

Review