நம்பிக்கையை இழக்கும்போது முதல்வர் பதவியில் இருந்து விலகத்தான் வேண்டும்: காங். தலைவர்!

நம்பிக்கையை இழக்கும்போது முதல்வர் பதவியில் இருந்து விலகத்தான் வேண்டும்: காங். தலைவர்!

Updated : 03 - 10 - 2021 / NYKVT 

            பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அவருக்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சித்துவுக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அமரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து அவர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், தற்போது அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் மேலிடத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சுர்ஜிவாலா அளித்துள்ள விளக்கத்தில் ‘‘முதல்வர் எம்.எல்.ஏ-க்களின் நம்பிக்கையை இழக்கும்போது, அவர் தனது பதவியில் இருந்து விலகத்தான் வேண்டும். 79 எம்.எல்.ஏ.-க்களில் 78 பேர் முதல்வரை மாற்ற வேண்டும் என கடிதம் எழுதினார்கள். நாங்கள் முதல்வரை மாற்றவில்லை என்றால், சர்வாதிகார போக்கு எனக் கருதப்படும்’’ என்றார்.

Share it On

Review