100 கோடியை நெருங்கிய சிவ கார்த்திகேயனின் சம்பளம்
27 sep 2023
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, தொகுப்பாளர், விருது விழா என அடுத்தடுத்து தனது திறமையை வெளிக்காட்டி தற்போது வெள்ளித்திரையில் சாதித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, கார்த்தி வரிசையில் கோலிவுட்டில் அடுத்ததாக வசூலில் கலக்கி வரும் நடிகராக உள்ளார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது.
2,3 படங்களுக்கு முன்பு சம்பள பிரச்சனை காரணமாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு டபுள் மடங்கு அதாவது ரூ. 70 கோடி முதல் 100 கோடி வரை உயர்த்தியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Review