ராஜமௌலி படத்தில் இருந்து விலகிய பிரபலம்…?

ராஜமௌலி படத்தில் இருந்து விலகிய பிரபலம்…?

Updated on: 09-04-2019

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாவதாக தெரிகிறது.
 
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட், டேய்சி ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் டேய்சி ஜோன்ஸ் இந்த படத்தில் இடம்பெற முடியவில்லை என்று படக்குழு அறிவித்துள்ளது.
 
படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குஜராத் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியும் என்று நம்புவதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

Share it On

Review