சினிமாவுக்கு குட்பை சொல்லப் போகும் பிரபல காமெடி நடிகர்!

சினிமாவுக்கு குட்பை சொல்லப் போகும் பிரபல காமெடி நடிகர்!

updated : 06-07-2020 / யுகா

                         தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் பிரம்மானந்தம்.  நகைச்சுவையில் பலவகையான திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை மனங்களை கொள்ளை கொண்டவர்.
தமிழில் 'மொழி' படம் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால், இனிவரும் நாட்களில் பிரம்மானந்தம் சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழு நேரமும் சீரியலில் தான் கவனம் செலுத்த போகிறார் என ஒரு தகவல் வெளியாகி தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சமீபத்தில் தான் சிறிய அளவிலான இதய அறுவை சிகிச்சையும் இவருக்கு நடந்தது. அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துவிட்டாராம். அதற்கேற்ற மாதிரி, தன்னை முக்கிய கதாபாத்திரமாக வைத்து தினசரி ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவும் இசைவு தெரிவித்து விட்டாராம் பிரம்மானந்தம்.

Share it On

Review