தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் நடத்திய போலீஸ் குறை தீர்ப்பு முகாம்!

தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் நடத்திய போலீஸ் குறை தீர்ப்பு முகாம்!

Updated : 30 - 09 - 2021 / NYKVT 

தூத்துக்குடி,

          தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துறைரீதியாக அலுவலர்களின் குறைகளை தீர்ப்பதற்காக உங்கள் துறையில் முதல்வர்  திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதன்படி போலீஸ் துறையில் போலீசாருக்கான குறைதீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் துறையில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கான குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்த முகாமில், ஆயுதப்படை, அனைத்து போலீஸ் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் அனைத்து போலீஸ்காரர்கள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை மொத்தம் 113 பேர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.

அது தொடர்பாக எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், ‘போலீசாரின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனு கொடுத்தவர்களுக்கு தனித்தனியாக எழுத்து மூலமாக பதில் கொடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Share it On

Review