மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பிரதமர் மோடி

மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பிரதமர் மோடி

jan 17 2024

மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும் தீனா, ஐ, சமஸ்தானம், தமிழரசன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. பிரதமர் மோடி இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக வருகை தந்து மணமக்களை வாழ்த்திய புகைப்படம் தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது. 

Share it On

Review