பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: அமெரிக்கா கவலை!

பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: அமெரிக்கா கவலை!

Updated : 03 - 10 - 2021 / NYKVT 

வாஷிங்டன்,
          தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்துவிட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜான் கெர்பி  செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், ‘‘நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாகப் பேசித் தீர்க்க விரும்புகிறோம். எல்லையில் உருவாகும் பயங்கரவாதத்தால் மற்ற நாடுகளுக்கு மட்டுமல்லாது, பாகிஸ்தானுக்கும் பாதிப்பு உள்ளது என்பதை அந்நாடு உணரவேண்டும் என தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் மீது டிரோன்களைப் பறக்கவிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேவைப்பட்டால் டிரோன் தாக்குதல் நடத்துவது தொடரும்’’ என தெரிவித்துள்ளார்.

Share it On

Review