இளநரை, வழுக்கையைத் தடுக்கும் எண்ணெய்க் குளியல்….

இளநரை, வழுக்கையைத் தடுக்கும் எண்ணெய்க் குளியல்….

Updated on: 23-04-19

இன்றைய தலைமுறையினர்  அதிகமாக சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று இளநரை.  கூடவே அரைசதம் ஆண்கள் இளவயதிலேயே வழுக்கையைச் சந்திக்கிறார்கள். உணவு வகைகளில்  மாற்றம் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.. உடல் பராமரிப்பை முறையாக கடைப்பிடிக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

முந்தைய மூத்த தலைமுறையில் முன்னோர்கள் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாத்தார்கள்.  இப்போது போல் பியூட்டி பார்லர்கள் இல்லை. ஆனாலும் 60 வயதிலும் பாட்டிகளின் கூந்தல் கருமையாக இருந்தது.  தாத்தாக் கள் காதோரங்களில் மட்டும் வெள்ளி நரைபோல் மின்ன இளமையோடு வலம் வந்தார்கள். காரணம் எண்ணெய்க்குளியல்தான்....

வாரம் இருமுறை நல்லெண்ணெய் தேய்த்துகுளித்தால் உடல் சூடு நீங்கி  உடல் உறுப்புகளிலும் வெப்பம் சமநிலையில் வைக்க உதவும். ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள்  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை களிலும்  அதிகாலையில்  எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொன்ன முன்னோர்கள் அப்படி செய்வதைக் கட்டாயமாக கொண்டிருந்தார்கள். தற்போது  நல்லெண்ணெய் பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலும் குறைந்து வருகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் வாரம் இருமுறை என்பது குறைந்து வாரம் ஒரு நாள், மாதம் இருமுறை, மாதம் ஒரு நாள் என்று மாறி தற்போது வருடத்துக்கு ஒருமுறை தீபாவளியன்று எண்ணெய்க்குளியல் செய் கிறார்கள். எண்ணெய்க்குளியல் என்று கூட சொல்ல முடியாது. கடமைக்கு எண்ணெயை உச்சியில் தடவி... குளிக்கிறார்கள்.

இயற்கை மாற்றத்தால் கோடையும் தன் வெப்பத்தை உயர்த்திக் கொண் டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் எண்ணெய்க்குளியல் மிகவும் அவசியம். எண்ணெய்க் குளியலால் உடல் குளிர்ச்சியடைவதோடு  கூந்தல் ஆரோக்யமும் பெறுகிறது. இளநரையைத் தடுக்கிறது. கூந்தல் வலுவடைந்து பளபளப்பு கூடுகிறது. உடலிலிருக்கும் சருமத்துவாரங்கள் வழியாக எலும்புவரை ஊடுருவி மூட்டுகளின் வலிமையை காக்கிறது. இதனால் மூட்டுகளில் வலி வருவதும் குறைக்கப்படுகிறது. 

எண்ணெய்க்குளியல் என்றால் என்ன என்பதை முதலில்  தெரிந்துகொள்ளுங்கள். முன்பெல்லாம் கண்களிலும் காதுகளிலும் எண்ணெய்விட்டு தேய்ப்பார்கள். கண் களில் உள்ள  சூடு குறைந்து, அழுக்குகள் வெளிவரும். காதுகளில் அழுக்குகள் வெளியேறும். ஆனால் தற்போது மருத்துவர்கள் கண்களிலும், காதுகளிலும் எண்ணெய் விடுதலைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.  கார ணம் கலப்படமிக்க எண்ணெய்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதுதான்.  ஆனால்   நல்லெண்ணெயை இலேசாக சூடு செய்து உச்சந்தலையில்  ஊற்றி சூடுபரக்க தேய்க்க வேண்டும். பிறகு கை, கால்களில் உள்ள மூட்டுகள்,  தொப்புள்,  பாதங்களில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்....இயன்றால்  உடல் முழுவதும் ஆயில் மசாஜ் செய்யலாம். 

நல்லெண்ணெய் ஊறவைத்து மசாஜ் செய்த அரைமணி நேரத்தில் மிதமான வெந் நீரில் குளிக்க வேண்டும். தலைக்கு ஷாம்புகளை உபயோகிக்காமல் சீயக்காய் உப யோகிக்க வேண்டும். உடலுக்கு  பாசிப்பருப்பு  கலந்த கடலைமாவை தேய்த்து குளிக்க வேண்டும். அன்று அசைவ உணவுகள், குளிர்ச்சியான உணவுகள் போன்ற வற்றைத் தவிர்க்க வேண்டும். பகலில் தூங்க கூடாதுஇவற்றையெல்லாம் சற்றும் மறக்காமல் கடைப்பிடித்தால் இளநரை தடுக்கப்பட்டு கூந்தல் உதிர்வு இருக்காது. வழுக்கை வராது. உடலும் குளிர்ச்சியாக இருக்கும். 

இனி வாரந்தோறும் எண்ணெய்க்குளியலை மறக்காதீர்கள்.

Share it On

Review