காங்கிரசில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை : அமரிந்தர் சிங்!

காங்கிரசில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை : அமரிந்தர் சிங்!

Updated : 30 - 09 - 2021 / NYKVT 

                   காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்பதால் அதில் நீடிக்க விரும்பவில்லை என்று பஞ்சாப் முன்னாள் முதல்-வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

சித்துவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகிய அமரிந்தர் சிங், நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இந்த நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்த நிலையில் பாஜகவில் அமரிந்தர் இணையபோவதாக தகவல் பரவியது. இது குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறியதாவது:- காங்கிரசில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. பாஜகவில் இணையவில்லை, அதே நேரத்தில் காங்கிரசில் தொடரும் எண்ணம் இல்லை.  காங்கிரசில் மூத்த தலைவர்களின் பேச்சுக்கு மரியாதை இல்லை என்றார்.

Share it On

Review