மெனிக்யூர்  உங்களின் தோற்றத்தில் கூடுதல் அழகை சேர்க்கும்.

&n..." />

பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரை வீட்டிலே செய்யலாம் !

பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரை வீட்டிலே செய்யலாம் !

Updated on: 25-04-19

மெனிக்யூர்  உங்களின் தோற்றத்தில் கூடுதல் அழகை சேர்க்கும்.

 

தேவையானபொருட்கள்
 

அரை கப் அரைத்து வைத்த ரோஜா இதழ் பேஸ்ட் 
 

அரைக் கப் ரோஜா இதழ் 
 

1 லிட்டர் வெதுவெதுப்பான கொழுப்பு நிறைந்த பால்
 

 2 பிளாஸ்டிக் அல்லது செராமிக் பவுல் 
 

4 டே.ஸ்பூன் சுகர் 
 

2 லெமன் வெட்டியது
 

2 டே.ஸ்பூன் வாசனை எண்ணெய்
 

4 டே.ஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம்
 

2 டே.ஸ்பூன் சந்தன பவுடர்
 

துண்டு 
 

லிக்யூட் சோப்
 

1 நெய்ல் பிரஷ்
 

1 நெயில் ஃபைல் 
 

ப்யூமிஸ்ஸ்டோன் (pumice stone)
 

மெனிக்யூர் செய்யும் முறை நகத்தில் ஃப்ரஷ் க்ரீம்மை வைக்கவும். 
 

பின் பவுலில் வெதுவெதுப்பான பாலில் வாசனை எண்ணெய்யை ஊற்றி ரோஜா இதழ்களை போட்டு அதில் ஊறவைக்கவும். 
 

5 நிமிடங்கள் ஊறவைத்து டெட் ஸ்கின்னை நீக்க நன்றாக தேய்க்கவும். 
 

கை மற்றும் நகத்தில் உள்ள அழுக்கை நீக்கவும். 
 

கூடுதலாக சோப்பை எடுத்து ப்யூமிஸ் ஸ்டோனை வைத்து கை மற்றும் முழங்கை வரை நன்றாக தேய்த்து அழுக்கை நீக்கவும்.  
 

லெமனை சுகரில் தொட்டு கைகளில் நன்றாக ஸ்க்ரப் செய்து தேய்க்கவும். 
 

ரோஜா பூ பேஸ்டில் சந்தன பவுடரைக் கலந்து மாஸ்க் போல் போட்டு 15 நிமிடம் கைகளை ஊறவைக்கவும். 
 

வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துண்டில் துடைக்கவும். 
 

1gvil0n8

 
 

பெடிக்யூர் 
 

வீட்டிலே பெடிக்யூர் செய்யலாம். 
 

தேவையானபொருட்கள் 
 

1 பிளாஸ்டிக் டப் 
 

100 கிராம் உப்பு
 

ஜாஸ்மின் எஸ்ஸன்சியல் ஆயில்
 

ஜாஸ்மின் ஃப்ளவர்ஸ்
 

ஜாஸ்மின் மஸாஜ் ஆயில்
 

2 ஆரஞ்ச் வெட்டியது 
 

2 டே.ஸ்பூன் ஓட்மீல் 
 

வெதுவெதுப்பான தண்ணீர்
 

நெயில் ஃபைல்
 

ப்யூமிஸ் ஸ்டோன்
 

நெயில் பிரஷ்
 

துண்டுகள் 
 

செய்யும்விதம் 
 

பாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் அதில் உள்ள டெட் ஸ்கின்னை நீக்குவது சற்று சிரமமாக இருக்கலாம். 
 

டப்பில் வெதுவெதுப்பான நீரில் 2 டே.ஸ்பூன் மசாஜ் ஆயிலை ஊற்றி, ஆரஞ்சு துண்டுகளை போட்டு பாதத்தை டப்பில் ஊறவைக்கவும். 
 

நெயில் பிரஷ் மற்றும் ஸ்டோனை வைத்து நன்றாக தேய்த்துக் கழுவவும். 
 

பின் தண்ணீரில் உப்பு மற்றும் மசாஜ் ஆயில் எஸ்ஸன்சியல் ஆயிலை ஊற்றி மீண்டும் சிறிதுநேரம் ஊறவைக்கவும். 
 

பின்னர் பாதத்தை சுத்தமான தண்ணீரில்  கழுவவும். 
 

ஓட்மீலை பேஸ்டு போல் கரைத்து பாதத்தில் மாஸ்க் போல் போட்டு 7நிமிடத்திற்கு பின் கழுவவும். ஓட்மீல் உங்களின் சருமத்தை மிருதுவாக்கி அழகாக மாற்றும். 
 

 lg4r9f6g
 

இதை வீட்டில் செய்து பாருங்கள் அழகான பாதம் மற்றும் மிருதுவான கைகளை பெறுங்கள்

Share it On

Review