வசூல் மழையில் மார்க் ஆண்டனி
27 sep 2023
விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் மார்க் ஆண்டனி படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. நாளுக்கு நாள் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று வந்த தகவலின்படி மாவீரன் படத்தின் வசூலை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது மார்க் ஆண்டனி. இதை தொடர்ந்து இப்படத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வசூல் வந்துகொண்டே இருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 87 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர் வரும் நாட்களில் ரூ. 100 கோடியை மார்க் ஆண்டனி தாண்டும் என படக்குழு எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
Review