வாஷிங்டனில் உள்ள வீட்டை விற்றார் கமலா ஹாரிஸ்!

வாஷிங்டனில் உள்ள வீட்டை விற்றார் கமலா ஹாரிஸ்!

Updated : 03 - 10 - 2021 / NYKVT 

வாஷிங்டன்,
           அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ளார். இவருக்கு இரண்டு படுக்கையறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு வாஷிங்டனில் இருந்தது. இந்த வீட்டியை கமலா ஹாரிஸ் 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 1.995 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதாக தெரிவித்திருந்த கமலா ஹாரிஸ், அதன்பின் 1.85 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். இவர் ஏற்கனவே சான் பிராஸ்சிஸ்கோவில் உள்ள அப்பார்ட்மென்ட்-ஐ 8.6 லட்சம் டாலருக்கு விற்பனை செய்திருந்தார். இந்த வீட்டை கமலா ஹாரிஸ் 1998-ம் ஆண்டு 2.99 லட்சம் டாலருக்கு வாங்கிருந்தார். கமலா ஹாரிஸ்க்கு இன்னும சில வீடுகள் உள்ளன. 3,500 சதுர அடியில் 3.2 மில்லியன் மதிப்பிலான வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது. தற்போது துணை ஜனாதிபதிக்கான வீட்டிற்கு வசித்து வருகிறார்.

Share it On

Review