136 பயணிகள் இருந்த விமானம் ரன்வே-யில் சறுக்கியது; ஆற்றில் விழுந்தது- அமெரிக்காவில் பரபரப்பு!

136 பயணிகள் இருந்த விமானம் ரன்வே-யில் சறுக்கியது; ஆற்றில் விழுந்தது- அமெரிக்காவில் பரபரப்பு!

Updated on: 04-05-19 /  Vinayak

136 பயணிகளை ஏற்றிக் கொண்டு பறந்த போயிங் 737 பயணிகள் விமானம், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்கு அருகேயிருந்த செயின்ட் ஜான் நதியில் நிலை தடுமாறி விழுந்துள்ளது. விமான ஓடுபாதையின் இறுதியில் இருந்த நதியில்தான், விமானம் நிலைதடுமாறி விழுந்துள்ளது.  

அமெரிக்க நேரப்படி நேற்றிரவு 9:40 மணிக்கு இந்த சம்பவம், ஜாக்சன்வில் என்ற இடத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஜாக்சன்வில் மேயர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விமானத்தின் எரிபொருள் நீரில் கலப்பதைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று கூறியுள்ளார். 

கியூபாவில் இருந்து இந்த விமானம் அமெரிக்காவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 

Share it On

Review