35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
Updated : 03-09-19 / Vinayak
ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில், 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில், அரசுப் படைக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகள், குண்டஸ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
அப்போது ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளிக்கும் இடையே நடந்த இருதரப்பு துப்பாக்கி சூட்டில், தலிபான் பயங்கரவாதிகள் 35 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாயினர், 11 பேர் காயமடைந்தனர்.
Review