மீண்டும் சினிமாவுக்கு வந்த பூவே உனக்காக நடிகை 

மீண்டும் சினிமாவுக்கு வந்த பூவே உனக்காக நடிகை 

sep 27 2023

குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தமிழில் ராஜ்கிரண் ஜோடியாக எல்லாமே என் ராசாதான் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் பின் விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் ஒளிப்பதிவாளர் சரவணனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதன்பின் 14 வருடங்கள் நடிக்காமல் இருந்தவர் 2014ம் ஆண்டு நகரவர்த்தி நடுவில் நான் என்கிற படத்தில் நடித்தார். தற்போது நடிகை சங்கீதா 9 ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள சாவேர் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறதாம். 
 

Share it On

Review