உடல் எடையை குறைத்த நடிகர் சூர்யா

உடல் எடையை குறைத்த நடிகர் சூர்யா

jan 17 2024

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவின் காட்சிகள் பெரும்பாலும் முடிவு அடைந்ததாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 43 வது படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து படத்தின் கதை அம்சம் அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் சூர்யா, ரசிகர் ஒருவர் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சூர்யா உடல் எடை குறைத்து வேற மாதிரியான லுக்கில் காணப்பட்டார். சூர்யா 43 படத்திற்காக தான் உடல் எடையை குறைத்துவிட்டாரா என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.  

Share it On

Review