திண்டுக்கல்லில் வீடுகளுக்குள் புகுந்த பாம்பு!

திண்டுக்கல்லில் வீடுகளுக்குள் புகுந்த பாம்பு!

Updated : 03 - 10 - 2021 / NYKVT 

                  திண்டுக்கல்லில் பெய்த அடை மழை காரணமாக அங்குள்ள கிராமங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 52) என்பவரின் வீட்டுக்குள் புகுந்த பாம்பு அவரை கடித்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில மணி நேர இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல்லை அடுத்த கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (38) என்பவர் பாம்பு கடிக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை தொடர்ந்து ராஜதானிக்கோட்டையை சேர்ந்த பாண்டியம்மாள் (60), செங்குறிச்சியை சேர்ந்த தனலட்சுமி (32), ராமையன்பட்டியை சேர்ந்த பாத்திமாமேரி (37), சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஞானவெங்கட்ராஜ் (30), எமக்கலாபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (12), கோபால்பட்டியை சேர்ந்த தேவதாஸ் (65) என காலை 11 மணி வரை அடுத்தடுத்து 7 பேர் பாம்பு கடி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Share it On

Review