அமெரிக்காவின் புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய விமானம்!

அமெரிக்காவின் புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய விமானம்!

Updated: 04-05-2019

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓடுதளத்தில் இறங்குபோது அருகிலுள்ள ஆற்றில் போயிங் ரக பயணிகள் விமானம் ஒன்று இறங்கியது. இதில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 136 பயணிகளுடன் போயிங் 737 ரக விமானம் ஒன்று சென்றது. ஜாக்சன்வில்லேவில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது நிலை தடுமாறி அருகே இருந்த செயின்ட் ஜான் ஆற்றில் இறங்கியது.

ஆழமற்ற பகுதியில் விமானம் இறங்கியதால், விமானம் நீரில் மூழ்கவில்லை. இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்துக்குள்ளான விமானம், குவாண்டநாமோ வளைகுடா  கடற்படை நிலையத்தில் இருந்து புறப்பட்ட வணிக ரீதியிலான விமானம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து உள்ளூர் நேரப்படி, இரவு 9.40 மணியளவில் நடந்துள்ளது.

பயணிகளுக்கு பாதிப்பு இல்லாதபோதும் விமானத்தின் இயக்கத்தை நிறுத்த முடியவில்லை. இதற்கான பணிகளில் பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Share it On

Review