இனி ட்விட்டரில் பிடிக்காத கமெண்ட்டுகளை மறைக்கலாம் - புது அப்டேட்
Updated : 27-11-19 / Vinayak
ட்விட்டரில் பதிவுகளுக்கு கீழ் வரும் ரிப்ளை/கமெண்ட்டுகளை மறைக்கும் Hide Replies என்ற அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரீட்வீட் என்ற அப்டேட்க்குப் பின்னர் ட்விட்டர் வெளியிட்டுள்ள மிகப்பெரும் அப்டேட் ஆக Hide Replies அப்டேட் பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் பதிவுகளில் அவசியமற்ற, சர்ச்சைக்குரிய பதில்களை, உரையாடல்களைத் தவிர்க்க இந்த Hide Replies வசதி உதவும். இத்தகைய வசதியால் ஆன்லைன் நாகரிகத்தை வளர்க்க உதவும் என்கிறது ட்விட்டர்.
இந்த Hide Replies வசதி முதன்முதலில் கடந்த ஜூலை மாதம் கனடாவிலும் அடுத்தடுத்த மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் வெளியிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆகிய இரண்டு தளங்களிலும் இந்த அப்டேட்-க்கு நல்ல ஆதரவு கிடைத்ததால் தற்போது சர்வதேச அளவில் இதை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது ட்விட்டர்.
இந்த அப்டேட்டுக்கு வரவேற்பு இருந்தாலும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
எப்படி இந்த வசதியை பெறுவது?
ட்விட்டர் மொபைல் ஆப் பயன்படுத்துபவர்கள் அதனை அப்டேட் செய்தால் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். இணைதளம் வழியாக பார்ப்பவர்கள் Hide Replies ஐ பயன்படுத்தலாம்.
நீங்கள் பதிவிட்ட பதிவுக்கு கீழ் வரும் ரிப்ளை/கமெண்ட்டுகளில் எதை மறைக்க விரும்புகிறீர்களோ, அதன் வலது மேல் மூலையில் உள்ள அம்புகுறி போன்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் இடெ Reply என்று இருக்கும். அதனை தேர்வு செய்தால், அந்த கமெண்ட் மறைந்துவிடும்.
அந்த மறைக்கப்பட்ட கமெண்ட்டுகள் தனியாக இருக்கும். அதற்குறிய தெரிவை கிளிக் செய்து பார்க்கலாம்
Review