500 இந்தியர்களை உளவு பார்க்க முயற்சி... கூகுள் எச்சரிக்கை..!
Updated : 02-12-19 / Vinayak
இந்தியர்கள் 500 பேரை உளவு பார்க்க முயற்சி நடந்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் அரசாங்கத்தின் மூலம் நியமிக்கப்படும் ஹேக்கர்கள் பல ஆயிரம் பேரின் கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.
போலி இ-மெயில் மூலம் அனைவரின் விவரங்களும் உளவு பார்க்கப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் குழுவைச் சேர்ந்த ஷேன் ஷன்ட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை 149 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான கணக்குகளை உளவு பார்க்க முயற்சி நடைபெற்றதாக கூறியுள்ளார். இதில், இந்தியாவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரின் கணக்குகளை உளவு பார்க்க முயற்சி நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் பேகாஸஸ் என்ற மென்பொருள் மூலம் சுமார் 1,400 பேரின் வாட்ஸ்அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்ட தகவல் வெளியாகி இருந்தது.
Review