லாக் டவுனில் காதலித்து இளம் நடிகையை மணந்த மூத்த நடிகர்!

லாக் டவுனில் காதலித்து இளம் நடிகையை மணந்த மூத்த நடிகர்!

updated : nykvt / 07-08-2020 / 14.30

                    பல திரைப்படங்களிலும் சின்னத்திரைகளிலும் நடித்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் சீன் பென். ஜட்ஜ்மென்ட் இன் பெர்லின் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். த லாஸ்ட் பேஸ் உட்பட சில படங்களை இயக்கியும் இருக்கிறார். சிறந்த நடிப்புக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் சீன் பென். வரும் 17 ஆம் தேதி 60 வயதைத் தொட இருக்கும் நடிகர் சீன் பென், பிரபல நடிகை மடோனாவின் முன்னாள் கணவர். 
1985 ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்த சீன் பென், 1989 ஆம் அண்டு விவாகரத்து பெற்றார்.

பிறகு நடிகையும் இயக்குனருமான ராபின் ரைட் என்பவரைக் காதலித்து 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த திருமணம் நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்தது. 2010 ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார்.  
பிறகு தனியாக வசித்து வந்த சீன் பென், இந்த கொரோனா காலத்தில் லீலா ஜார்ஜ் என்ற அமெரிக்க நடிகையை காதலித்து திருமணம் செய்துள்ளார். லீலாவுக்கு வயது 28. கடந்த நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி ஹாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியானது. ஆனால், அமைதிகாத்து வந்த அவர்கள் கடந்த வியாழக்கிழமை திருமணம் செய்துள்ளனர். இதை நடிகர் சீன் பென் இப்போது உறுதி செய்துள்ளார்.

Share it On

Review