103வது வயதில் ஹாலிவுட் நடிகர் கிரிக் டக்ளஸ் மரணம்
Updated : 07-02-2020 / Vinayak
1950 - 60களில் ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்தவர் கிரிக் டக்ளஸ். அவர் நடிப்பில் வெளிவந்த அவுட் ஆப் த பாஸ்ட், சாம்பியன் , த பேட் அண்ட் த பியூட்டிபுல் , லஸ்ட் ஆப் லைப் பாத்ஸ் ஆப் குளோரி, த வைக்கிங், செவன் டேஸ் இன் மே, சேட்டர்ன் 3, டாப் கய்ஸ் உள்பட பல படங்கள் வெற்றி பெற்றன. பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்ட டக்ளஸ், ஸ்கேல்வாக் என்ற படத்தை இயக்கினார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2008ம் ஆண்டு எம்பயர் ஸ்டேட் பில்டிங் மர்டர்ஸ் என்ற டி.வி தொடரில் நடித்தார். அதன் பிறகு முதுமை காரமாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். கலிபோர்னியாவில் உள்ள பிரேவரி ஹில்ஸ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கிரிக் டக்ளஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 103. சினிமா துறையில் 50 ஆண்டுகள் ஆற்றிய சாதனைக்கான இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Review