சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ரெனீ வென்றார்!

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ரெனீ வென்றார்!

Updated : 10-02-2020 / Vinayak

உலக சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற விழாவில் சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது 1917 திரைப்படம்.

 

 

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது நடிகை ரெனீ ஸெல்விகர்க்கு வழங்கப்பட்டது. ஜுடி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரெனீ ஸெல்விகர்க்கு இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

Share it On

Review