உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ருத்ரம்-1’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை ராஜ்நாத் சிங் பாராட்டு!
updated : 10 - 10 -2020 / 13.05 / NYKVT
புதுடெல்லி,
எதிரி நாடுகளின் ரேடார்கள், ஜாமர்கள், தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி அழிக்கும் வகையில் ‘ருத்ரம்-1’ என்ற ஏவுகணையை இந்தியாவின் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கி உள்ளது. ஒலியை விட 2 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை ஒடிசாவின் பாலாசோரில் நேற்று சோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்திய விமானப்படைக்கு பலத்தை அளிக்கும் இந்த ஏவுகணைகள், விமானப்படையில் இணைக்கப்படும்போது சுகோய் விமானத்தில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்படும் என தெரிகிறது. ‘ருத்ரம்-1’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததற்காக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
Review