37 வயது போனிகபூரின் மகனை காதல் திருமணம் செய்யும் 49 வயது நடிகை

37 வயது போனிகபூரின் மகனை காதல் திருமணம் செய்யும் 49 வயது நடிகை

  10 nov 2022

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்தவரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர். இவரின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ளார்.  பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உயிரே படத்தில் இடம்பெற்ற தக்க தக்க தையா தையா பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர். மலைக்கா அரோராவுக்கு தற்போது 49 வயது ஆகிறது. இவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்தவர்.  இந்த ஜோடிக்கு அர்ஹான் என்கிற 20 வயது மகன் உள்ளார். அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்ட மலைக்கா அரோரா, அவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கிசுகிசுவும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருந்தார் அர்ஜுன் கபூர். இந்நிலையில், மலைக்கா அரோராவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நான் சம்மதித்துவிட்டேன் என பதிவிட்டு ஹார்டின் எமோஜிகளை போட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் 2வது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதை தான் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளதாக கருதி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Share it On

Review