கேன்ஸ் விழாவில் நடனம் ஆடி அசத்திய தீபிகா படுகோனே
21/5/2022. 16:40
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைத்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெருமை எனலாம். இவ்விழாவில் பல நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் தீபிகா படுகோனே ஒரு நடுவராக
அமர்த்தப்பட்டிருப்பதே அதற்கு சான்று. இந்தியா கவுரவமான நாடு என்று அதற்கான முக்கியத்துவத்தை கேன்ஸ் அமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விழாவில் தான்சானியா கிராமிய பாடகர் மேமே கான் ஒரு பாடலைப் பாட ஆரம்பித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த தீபிகா, தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே ஆகியோர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதுபற்றி தீபிகா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ‘‘இன்றைய சூழலில் இந்திய சினிமா உலகின் உச்சத்தில் இருக்கிறது. நான் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்வேன் என்று நினைத்துக்க கூட பார்க்கவில்லை. ஆனால் இன்று இருக்கும் நிலையில் நாளை இந்தியாவிலேயே கேன்ஸ் போல் திரைப்பட விழா நடந்தாலும் நடக்கும்’’ என்றார்.
Review