பாலியல் பாலாத்காரத்தால் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் : ராகுல் காந்தி
Updated : 04 - 08 - 2021 / NYKVT
புதுதில்லி,
தில்லியில் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க அவரது குடும்பத்துக்கு துணை நிற்பேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது பட்டியிலின சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். அவரது உடல் உரிய விசாரணை நடத்தப்படாமல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் குடும்பத்தாருடன் பேசினேன். அவர்கள் நீதியை தவிர்த்து வேறு எதுவும் கேட்கவில்லை. நீதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உதவ வேண்டும். அதை நாங்கள் செய்வோம். உங்களுடன் துணை நிற்பேன் என தெரிவித்தேன். நீதி கிடைக்கும் வரை ராகுல் காந்தி அவர்களுக்கு துணை நிற்பான்’’ இவ்வாறு தெரிவித்தார். ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் "சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றை தான் உணர்த்துகிறது. அவர்களின் மகளுக்கு நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதியை தேடிய பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன்’’ என டுவீட் செய்துள்ளார்.
Review