10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம் செய்வது எப்படி?

10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம் செய்வது எப்படி?

ஆரோக்கியமான சுவையான காலை உணவை தயாரித்து சாப்பிடுவது என்பது எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகும் . காலையில் நல்ல உணவை சாப்பிடும்போதுதான் அந்த நாளின் வேலைகளையும் கூட நிம்மதியாக செய்ய முடியும். ஆனால் அதற்கு போதிய நேரமும் நமக்கு தேவைப்படும். அந்த மாதிரி ஈஸியாகத் தயாரிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மாங்கோ ரைஸ். இவை நம் நாவின் நரம்புகளை சப்புக் கொட்ட வைத்து விடும். இதன் காரசாரமான புளிப்புச் சுவை நம் நாவின் சுவை நரம்புகளைத் தூண்டச் செய்து விடும். அந்த அளவுக்கு இதன் டேஸ்ட் எல்லாரையும் இழுக்கும். இது நமக்கு அருமையான சுவையை தருவதோடு ஒரு ஆரோக்கியமான உணவாகவும் அமைகிறது. இதில் சேர்க்கப்படும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை போன்றவை நமக்கு அதிகப்படியான புரோட்டீன்களை கொடுக்கிறது. அப்படியே கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து கறிவேப்பிலையை அதன் மேல் அப்படியே தூவி சாப்பிடும் போது அந்த மாங்காவின் புளிப்பு சுவையும் இந்த தாளித்த நறுமணமும் அப்பப்பா அதன் சுவையே தனி தான். உங்கள் காலை உணவை உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் விதத்தில் சாப்பிட்டு மகிழலாம்.

INGREDIENTS

சாதம் - 1 கப்

துருவிய தேங்காய் - 3/4 கப்

எண்ணெய் - தாளிப்பதற்கு

கொத்தமல்லி இலை - 1/2 கப்

வேர்க்கடலை - 1/2 கப்

பச்சை மிளகாய் - 8-10

மாங்காய் - 1

கறிவேப்பிலை - சில கொத்து

பெருங்காயம் - கொஞ்சம்

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் - 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு - 1-2 டேபிள் ஸ்பூன் (சுவைக்கேற்ப)

HOW TO PREPARE

ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள். அதில் அரிசியை அளந்து எடுத்துக் கொண்டு நன்றாகக் கழுவுங்கள். ஒரு பிரஷ்ஷர் குக்கரை எடுத்து கொள்ளுங்கள்.கழுவிய அரிசியை சேர்த்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்னும் அளவில் ஊற்றி, மூன்று விசில் வரும்வரை வேகவிடுங்கள். பிறகு மூடியை திறந்து 10-15 நிமிடங்கள் வரை ஆற விடவும். சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம். ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளுங்கள் வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக நுணுக்கி வைத்துக் கொள்ளுங்கள் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து வதக்கவும். இப்பொழுது வேர்க்கடலையை சேர்த்து லேசாகப் பொன்னிறமாக வறுக்கவும். அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் இவைகளை சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும் இப்பொழுது வேக வைத்த அரிசியை சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இப்பொழுது துருவிய தேங்காய், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும் கடைசியாக வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். இதை சூடாக ஒரு பெளலிற்கு மாற்றி தேங்காய் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும். நாவிற்கு விருந்தளிக்கும் சுவையான மாங்காய் சாதம் ரெடி.

INSTRUCTIONS

கொஞ்சம் நேரம் முன்னதாக சமைத்து சாதத்தை பயன்படுத்தினால் கட்டிகள் இல்லாமல் உதிரியாக இருக்கும். வெந்தயம் மற்றும் கடுகுகின் சுவை மாங்காயின் புளிப்பு சுவையை நல்ல தூக்கலாக காட்டும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். கறிவேப்பிலை சேர்ப்பது நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்

Share it On

Review