அளவுக்கு அதிகமான சூட்டில் டீ குடித்தால் உணவுக்குழாய் புற்றுநோய் வருமா?
சமீபத்திய ஆய்வு மிகவும் சூடாக டீ குடித்தால் அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. International Journal of Cancer என்ற புத்தகத்தில் 75 டிகிரி செல்சியஸிற்கு மேல் அடிக்கடி டீ குடித்தால் அது ஆபத்தானது என்று தெரிவித்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் 700மிலி சூடான டீ குடிக்கும் (60 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேலாக) 40லிருந்து 75 வயது வரை உள்ள 50,045 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 90% பேருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிர்ச்சி முடிவு தெரியவருகிறது. இந்த ஆய்வு முடிவு இதே போன்று காபி, ஹாட் சாக்லேட் மற்றும் சூடாகக் குடிக்கும் அனைத்துவித பானங்கள் குடிப்பவர்களுக்கும் வருவதாக சொல்கிறது.
அதனால் 4-5 நிமிடம் ஆறவைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
Review