நடிகை துனிஷா இறப்பில் புதிய திருப்பம்

நடிகை துனிஷா இறப்பில் புதிய திருப்பம்

26 dec 2022

இந்தியில் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை துனிஷா சர்மா. நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்த நிலையில் துனிஷாவை திருமணம் செய்து கொள்ள நடிகர் ஷீசன்கான் மறுத்ததாக தெரிகிறது. இதனால் கவலையில் இருந்த நடிகை துனிஷா சர்மா மும்பை அருகே படப்பிடிப்பு தளத்தில் நேற்று முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். துனிஷா சாவுக்கு காதலன் ஷீசன் கான் தான் காரணம் என்று புகார்கள் கூறப்பட்டன. நடிகர் ஷீசன் கானை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டிய தாக வழக்குப்பதிவு செய்யப் பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இன்று காலை அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நடிகை துனிஷா சர்மா சாவுக்கு நான் காரணம் அல்ல. ஏற்கனவே அவர் பலதடவை தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கிறார். தற்போது தற்கொலை செய்து என் மீது பழி போட்டுள்ளார். எனக்கும் அவரது மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து துனிஷாவின் தாயார் அளித்த பரபரப்பு பேட்டியில், "எனது மகள் துனிஷா நடிப்பு மட்டுமே இலக்காக கொண்டிருந்தாள். திரை உலகில் புகழ்பெற வேண்டும் என்பது அவளது ஆசை ஆகும். ஆனால் உடன் நடித்த ஷீசன் கான் கடந்த 4 மாதங்களாக எனது மகளை மிரட்டி வந்தான். வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். ஒரு கட்டத்தில் எனது மகள் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள். ஆனால் எனது மகளுக்கு அவன் துரோகம் செய்துவிட்டான். ஷீசன் கானுக்கு ஏராளமான துணை நடிகைகளுடன் பழக்கம் உள்ளது. நிறைய பெண்களை அவன் ஏமாற்றி உள்ளான். இதை அறிந்து எனது மகள் கேட்ட தால் அவன் எனது மகளை கொடுமை படுத்த தொடங்கிவிட்டான். 3 மாதங்கள் பழகிவிட்டு துரோகம் செய்துள்ளான். அவனை போலீசார் விசாரித்து விட்டு வெளியே விட்டுவிடக்கூடாது. கடுமை யான தண்டனையை அவனுக்கு வாங்கி கொடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார். துனிஷா இறந்த போது அவர் கர்ப்பமாக இருந்ததாகவும், லவ் ஜிகாத் மூலம் அவரை மதமாற்ற செய்ய முயற்சி நடந்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் போலீசார் திட்ட வட்டமாக மறுத்துள்ளனர்.

Share it On

Review