அதிபரை பதவி விலகக்கோரி பிரேசிலின் முக்கிய நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
updated : 01 - 06 - 2021 / NYKVT
பிரேசில்,
பிரேசில் நாட்டின் முக்கிய நகரங்களில் தலைநகர் ரியோ-டி-ஜெனிரோ உட்பட 200-க்கும் மேற்பட்ட பல நகரங்களில் பிரேசில் அதிபர் போல்சோனோரா (Jair Bolsonaro) அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பிரேசில் அரசு மிகவும் மோசமாக தோல்வியடைந்து விட்டது மக்கள் ஒரு புறம் வழிவகுக்கும் மறுபுறம் பொருளாதார நெருக்கடிகளுக்கும் இடையே சிக்கி பெரும் சிரமம் படுகிறார்கள் என்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
பிரேசிலில் இடதுசாரி அமைப்புக்கள். தொழிற்சங்கங்கள். பெண் உரிமை அமைப்புக்கள் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒருங்கிணைந்து பிரேசில் அதிபர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ரியோடி ஜெனிரோ நகரில் சமூகங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும்பொழுது கலந்துகொண்டவர்கள் அருகிலுள்ள தெருக்களில் கூட்டம் கூட்டமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
பிரேசிலில் இதுவரை மக்களின் செல்வாக்கு பெற்று அசைக்கமுடியாத அதிபராக விளங்கிய போல் சோனோரா பதவி விலக வேண்டும் என்று இப்பொழுது 57 சதவீதம் பேர் கோருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரை அதிபர் பதவியிலிருந்து விலக்க இடதுசாரி அமைப்புகளும் திட்டமிட்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.
Review