ஜேம்ஸ் பாண்ட் பட நடிகைக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
Updated : 17-03-2020 / Vinayak
கரோனா வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை தெரிவித்துள்ளார்.
40 வயது ஒல்கா கரிலேங்கோ, உக்ரைனைச் சேர்ந்த பிரெஞ்சு நடிகை. 16 வயதில் மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கியவர், 2005 முதல் படங்களில் நடித்து வருகிறார். 2008-ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான குவாண்டம் ஆஃப் சோலஸில் கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில் கரோனா வைரஸால் ஒல்கா பாதிக்கப்பட்டுள்ளார்.
தனக்குக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவரின் உதவியை நாடினேன். பிறகுதான் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது தான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். அனைவரும் உடல்நலத்தில் கவனமாக இருங்கள் என்றும் ஒல்கா அறிவுறுத்தியுள்ளார்.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ், தானும் தன் மனைவி ரீட்டா வில்ஸனும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
குவாண்டம் ஆஃப் சோலஸ் படத்தில் ஒல்கா
Review