டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு தமிழக வீரர் சரத் கமல் முன்னேறினார்!
Updated : 27 - 07 - 2021 / NYKVT
டோக்கியோ,
தற்போது ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அபோலோனியாவை எதிர்கொண்டார். இதில் 2- 11, 11- 8, 11 -5, 9- 11, 11 -6, 11- 9 என்ற கணக்கில் சரத் கமல் வென்றார். இதன்மூலம் 4 -2 என்ற செட் கணக்கில் வென்ற தமிழக வீரர் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணிக்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தான் ஆண்கள் அணியை எதிர்கொண்டது. இந்திய ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தரூன்தீப் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போட்டி தொடங்கியது முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இந்திய ஆண்கள் அணி 6- 2 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் ஆண்கள் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் அணி வில்வித்தை போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று காலை நடந்த காலிறுதியில் இந்தியா பலம் வாய்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. தென்கொரிய வீரர்களுக்கு இணையாக இந்திய வீரர்களால் அம்புகளை தொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 54- 59, இரண்டாவது செட்டை 57 -59, மூன்றாவது செட்டை 54- 56 என இழந்த இந்திய அணி செட் பாயிண்டில் 0- 6 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.
வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர். இதில் பவானி தேவி 15 -3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சப்ரே முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நடியாவை எதிர்கொண்டார். இதில் பவானி தேவி 15 -3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் பிரான்ஸை சேர்ந்த மனோனுடன் போட்டியிட்டதில், 7- 15 என்ற கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
Review