இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு!

இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு!

Updated : 27 - 07 - 2021 / NYKVT 

டோக்கியோ, 
            ஐப்பானில் நடைபெரும் ஒலிம்பிக்  போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை  மீராபாய் சானு வென்றார். இந்த பிரிவில் சீனாவின் ஹூ ஜிஹுய் தங்கம் வென்று உலக சாதனை படைத்தார். இந்தோனேசிய வீராங்கனை  கான்டிகா ஐசா வெண்கல பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால். அவரது பதக்கம் பறிக்கப்படும் அடுத்த இடத்தில் இருக்கும்  மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share it On

Review