இரத்த அழுத்தம், இதய நோய்களைத் தடுக்க உதவும் ’பூண்டு டீ’...!
Updated : 21-11-19 / Vinayak
பூண்டு டீ பருவநிலை மாற்றங்களில் ஏற்படும் சளி, இறுமல் , காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக இருக்கும்.
பூண்டு பொதுவாகவே உணவில் சேர்த்துக்கொள்வதால் கொழுப்பைக் கரைக்கும், வாயுத் தொல்லைகளை நீக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதை சமையலில் சேர்த்து சாப்பிடுவதை விட டீ யாகக் குடிப்பதால் இன்னும் பல நன்மைகள் நேரடியாகக் கிடைக்கும். எனவேதான் பலரும் தற்போது பூண்டு டீ-க்கு மாறியுள்ளனர்.
பூண்டு டீ பருவநிலை மாற்றங்களில் ஏற்படும் சளி, இறுமல் , காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக இருக்கும். மேலும் நோய் தொற்றுகளிடமிருந்து தப்பிக்க நல்ல வழியாக இருக்கும். இதோடு இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், வயிற்று புற்றுநோய், வாய் துர்நாற்றம், வாய் புண் போன்ற பிரச்னைகளும் வராது என ஆய்வுகளும் கண்டறிந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு வெஜினாவின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பூண்டு டீ உதவுமாம்.
எப்படி தயாரிப்பது ?
3 - 4 பூண்டு பற்களை உறித்து இடித்துக்கொள்ளுங்கள். அதை 2- 3 கப் தண்ணீரில் போட்டு நன்குக் கொதிக்க வையுங்கள். பின் அதை வடிகட்டி தேவையான அளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சுவையாக அருந்தலாம்.
Review