இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!

Updated : 24 - 03 - 2020 /  YUVAN   

              இந்தியாவில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் கரோனா வைரஸ் வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 23 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். ஏற்கனவே, கடந்த 19 ஆம் தேதி நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க கோரிக்கை வைத்து இருந்தார். முன்னதாக, கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Share it On

Review